Wednesday, February 01, 2012

புற்று நோய் - வேதனைகளை தீர்க்கும் பரிசோதனை - நேசம் +யுடான்ஸ் கட்டுரை

புற்று நோய் - ஒரு பார்வை

புற்றுநோய் என்பது ஒரு நோயல்ல. சாதாரண செல்கள் தனது வளர்ச்சியின்போது செல் பிரிதல் நடைபெறுகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஒரு மரபணுவும் உண்டு. சில செல்களில் சில சமயம் பிரிதலில் வளர்ச்சி கட்டுப்பாட்டை இழந்து வெகு வேகமாக இஷ்டம் போல் பிரிகின்றன. அவை தனக்கு வேண்டிய உணவையும் கூட பக்கத்திலிருக்கும் செல்களிடம் இருந்து அநியாயமாகப் பிடுங்கி, சாப்பிடுகின்றன.
புற்று நோயை தொடக்க நிலையில் கண்டுபிடித்தால், அதைக் குணப்படுத்த முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு, நோயின் தீவிர தாக்குதலுக்கு உள்ளாகிய பின்புதான், குணப்படுத்த முடியாத நிலையில் புற்று நோய் கண்டறியப்படுகிறது.ஏனெனில், அந்த நிலைக்குப் பின்னர்தான் அவர்களுக்கு வெளி அடையாளங்கள் தெரிய வருகிறது. எனவே, புற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்வதுதான் சரியான சிகிச்சை முறை.
உலகில் சுமார் 200 வகை புற்றுநோய்கள் உள்ளன. இதில் சுமார் 10-15 வகைகளே பரவலாக காணப்படுகின்றன. அதில் முக்கியமானவை பெண்களுக்கு மார்பகம், கருப்பையின் வாய் & வயிறு போன்ற இடங்களிலும், ஆண்களுக்கு ஆண் இனப்பெருக்க உறுப்புக்கு உற்பத்தி செய்து தரும் பிராஸ்டேட் சுரப்பி (Prostate gland) என்ற உறுப்பிலும், வயிறு, சிறுநீரகம் போன்ற இடங்களிலும் பொதுவாக வருகிறது. 
புற்று நோய் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை உலகில் 79 ஆயிரம் பேருக்கு புற்று நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் இந்தியர்கள்.புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள்
உலகத்திலேயே டென்மார்க்கில்தான் அதிக அளவு புற்று நோய் காணப்படுகிறது. இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 1,00,000 பெண்கள் கருப்பை புற்று நோயால் இறக்கின்றனர்.அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா உலகில் 4வது இடத்தில் இருந்து வருகிறது. இவை நீங்கலாக ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.
புற்று நோய் எல்லா வகையான விலங்கு களையும் தாக்குகிறது. புற்றுநோய் புதிய நோயும் அல்ல. பல்லா யிரக்கணக்கான ஆண்டு களுக்குமுன் வாழ்ந்து மறைந்த டைனோசர்கள் புற்று நோயால் தாக்கப் பட்டிருந்ததை கண்டறிந் திருக்கின்றனர்.

புற்று நோய் காரணிகள் 
புற்று நோய் வர பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும்.  ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.
புகை பிடிப்பவர் களுக்கெல்லாம் புற்றுநோய் வருகிறதா? புகைக்காதவர்கள் புற்றுநோயால் அவதிப்படுவதில்லையா? இப்படி ஏறுக்கு மாறாக  கேட்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர் பலர். புகைப்பிடிப்பவர்களிடையே நுரை யீரல் புற்றுநோய் அதிகமாகக் காணப் படுவது நன்கு ஆய்ந்தறிந்து சொல்லப் பட்ட ஒன்று. சிலருக்கு வருவதில்லையே எனக் காரணம் காட்டி, புகை பிடித்து வம்பை வலிய விலைக்கு வாங்குவது எவ்வகையில் நியாயம்? மேலும், புகைப் பதால் மட்டுமே புற்று நோய் வருமென்று யாராவது சொன்னார்களா? வேறு பல காரணங்களாலும் புற்று நோய் தோன்றலாம். புகையிலையை வாயில் அடக்கிக் கொள்வது. பாக்குப் போடுவது , பூச்சிக்கொல்லி மருந்துகள் கொண்ட மற்றும் தீய்ந்த உணவுப்பொருட்களைச் சாப்பிடு வது போன்றவற் றhலும் புற்று நோய் ஏற்பட முடியும். இத்தகைய காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று தெரிந்த பிறகும், இவற்றைக் கைவிடாமல் இருப்பது அறிவுடைமை அல்லவே.
புற்று நோய் உண்டாவதற்கான துல்லியமான காரணி இதுவரை க்ண்டறியப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணி உள்ளது.
• புகையிலை பயன்படுத்துவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் காற்று மாசு மற்றும் கதிர்வீச்சு காரணமாகவும் நுரையீரல் புற்று வரும் வாய்ப்பு உண்டு.
• புற்றுநோய் என்பது முக்கியமாக 90-95% சூழல் தொடர்பான ஒரு நோய்தான். 5-10% மட்டுமே பாரம்பரிய மரபணுக்கள் மூலம் வருகிறது.
• இதற்கான காரணிகள் என புற்று நோய் ஆராய்ச்சி மையங்கள் அறியப்பட்டவை:
1.புகையிலை: 25-30%
2.உடல் பருமன்:30-35%
3.கதிர்வீச்சு:10% வரை
4.மனழுத்தம், உடல் பயிற்சி இன்மை & சூழல் மாசு..15-20%
2011 பிப்ரவரி கணக்குப்படி, இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.2 கோடிப்பேர். இதில் புகையிலையால் ஏற்பட்ட பாதிப்பே அதிகம்.
இந்த எண்ணிக்கையில் 55% புற்றுநோய் தடுக்கக் கூடியது. 65% புற்று நோயாளிகள் இதன் 3& 4 ம் நிலையில் கண்டறியப்பட்டுள்ள‌ன‌ர். இந்த நிலையில் அறியப்படும்போது, அவற்றின் சிகிச்சை என்பது சிரமமானதே.


உடல் பகுதிவாரியாக புற்று நோய் காரணிகள் 
வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.

நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.

வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.

ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.

மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.

கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது)

சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.

புற்று நோய் அறிகுறிகள்
உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன. அவை: குணமாகாத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல். கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.

பொதுவாக அனைத்து புற்றுநோய்களுக்கும், எடை குறைவு, ஏதாவது ஒரு இடத்தில் கட்டி/மதமதப்பு இருக்கும். சில சமயம் காய்ச்சல், இரத்த சோகை மற்றும் இரவில் வியர்த்தல் போன்றவையும் தென்படும்.

புற்று நோய் இருப்பதாக சந்தேகம் வந்தால், மருத்துவ சோதனை மூலம் அதனை அறிவது மிக எளிது. அந்தப் பகுதியிலிருந்து எடுத்த செல்களை ஆராய்ந்தால் அவற்றின் தன்மை தெரியும். புற்று நோயை, அது வளர்ந்திருக்கும் நிலை அறிந்து, அதனை வேதி சிக்ச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

அதனை சரியாக்குவது என்பது நீங்கள் எவ்வளவு தைரியமாய் உள்ளீர்கள் என்பதும், அது எந்த இடத்தில் இருக்கிறது மற்றும் அதன் வளர்நிலை என்ன என்பதைப் பொறுத்துமே அமைகின்றன.


புற்று நோய் தடுப்பு வழிமுறைகள் 

புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.

`ஹியூமன் பபிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus – H.P.V) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோயான கர்ப்பப்பைப் புற்றுநோயைத்தடுப்பதற்க்கான தடுப்பூசி இருப்பது நம்மில் பலருக்குத்தெரியாது.
ஆண்டுதோரும் 74000 பெண்கள் இந்தியாவில் இந்த நோயால் இறக்கிறார்கள்.
இந்தியாவில் 8 பெண்களில் ஒருவர் உடலில் இந்த வைரஸ் கிருமி இருக்கிறது. எப்போது அது நோயை உண்டாக்கும் என்பது தெரியாது. இவர்கள் நோய் பரப்புபவர்கள்(Carrier) ஆவர்.இது பெண்களிடமிருந்து ஆண்களுக்கு உடலுறவு மூலம் பரவுகிறது. ஆண்களுக்கு ஆணுறுப்பில் புண் போன்றவற்றையும் உண்டாக்குகிறது.
இதனைத்தடுப்பதற்காக அனைவருக்கும் கர்பப்பைப் பரிசோதனையும் பாப் ஸ்மியர் என்ற சோதனையும் எல்லா மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது.
நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் உடனே அறுவை சிகிச்சை செய்து கீமோதெரபி என்ற சிகிச்சை முறையை 2-3 தடவை எடுத்துக்கொண்டால் குணப்படுத்திவிடலாம். இது ஒரு குணப்படுத்தக்கூடைய வகைப் புற்றுநோயாகும்.

H P V (human pappilloma Virus) தடுப்பூசிகள் பெண்களுக்கு 9 லிருந்து 26 வயதுவரை போடலாம்.ஆயினும் 9-12 க்குள் போடுவது சிறந்தது. 9 வயதில் போடும்போது பெண்ணின் நோய் எதிர்ப்புசக்தியானது அதிக அளவில் உருவாகி வைரஸைத் தாக்கத் தயாராக இருக்கும்.

இந்த தடுப்பூசியானது மேலைநாடுகளில் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.

1. முதலில் வாழ்க்கையைப் பற்றிய மட்டற்ற, நெகிழ்வற்ற, உறுதியான நம்பிக்கையுடன், நல்ல உணர்வுடன் இருங்கள்.
2.நிறைய தாவர உணவுகள், பயறு வகைகள் சாப்பிடுங்கள்.ஊட்டம் நிறைந்த உணவையே சாப்பிடுங்கள்.இ, சி-வைட்டமின் நிறைந்த உணவு களைச் சாப்பிடுங்கள்.நார்ப்பொருள் நிறைந்த நிறைய காய்கறிகள், பழங்களை உணவைச் சாப்பிடுங்கள்.அதிக சூடான உணவு சாப்பிடா தீர்கள். மிதமான சூடுபோதும். எப்போதும் தீய்ந்த உணவைச் சாப்பிடாதீர்கள்.
3.நிறைய நீர் அருந்துங்கள்.
4.இயற்கைப் பொருள்களையே வீட்டிலும் வெளியிலும் பயன்படுத்துங்கள்.
5.உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.
6. மது, புகையிலை  பழக்கத்தை அறவே ஒழியுங்கள்
7.அதிகமாக உடற்பயிற்சி செய்யுங்கள்.

புற்று நோய் பரிசோதனை வழிகள் 

முதலில் நாம் குறிப்பிட்டிருக்கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.

புற்று நோய் சிகிச்சை 


ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு `பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர்’ என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.

 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய்க்கு `மேஜர்’ ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது `சிம்பிளான’ ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று `ரிஸ்க்’தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

புற்றுநோய் பாத்தித்த இடம், கட்டியின் தர வரிசை, புற்றுநோயின் நிலை, மற்றும் நோயாளியின் பொதுவான (செயல்திறன் நிலைமை) நிலை ஆகியவற்றை அறிந்துகொண்ட பின்னரே சிகிச்சை முறையை தேர்வுசெய்யலாம். பல சோதனை புற்றுநோய் சிகிச்சை முறைகள் மேம்பாடு அடைந்துள்ளன.

உடம்பிற்கு பாதிப்பு ஏற்படாமல் புற்றுநோயை முழுமையாக அகற்றுவதே சிகிச்சையின் நோக்கமாகும். சிலநேரங்களில் இதனை அறுவைச்சிகிச்சை மூலம் செய்யலாம், ஆனால் நுண்மையான மெடாச்டாசிஸ் மூலம் புற்றுநோய் அண்மையில் உள்ள திசுக்களுக்கு பரவும் வாய்ப்பு அல்லது தூரமான இடத்திற்கு பரவும் வாய்புகள் பல நேரங்களில் இவ்வகையான சிகிச்சையின் ஆற்றலை குறைத்துவிடுகின்றன. கெமொதெராபி (வேதிச்சிகிச்சை)யின் ஆற்றல் உடலின் மற்ற திசுக்களில் ஏற்படும் நச்சுத்தன்மையினால் குறைகிறது. கதிர் இயக்க சிகிச்சையும் பொதுவான திசுக்களை பாதிக்கும்.

"புற்றுநோய்" என்பது நோய்களின் பிரிவை குறிப்பிடுவதால், அதற்கு ஒரேயொரு "புற்றுநோய் தீர்க்கும் சிகிச்சை முறை " இருப்பது சாத்தியமாகாது, இதை தொற்று நோய்களுக்கான ஒரே ஒரு சிகிச்சை முறை என்ற நடைமுறையில் ஒவ்வாத கருத்துடன் ஒப்பிடலாம்.


யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது!. ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.
























Friday, November 11, 2011

REVOLUTION 2020 - புத்தக விமர்சனம்

Five point someone, One night@ call center, The 3 mistakes of my life, 2 states போன்ற விற்பனையில் சாதனை படைத்த நூலின் ஆசிரியர் சேத்தன் பகத்தின் சமீபத்திய வெளியீடு இப்புத்தகம். காதல், காமம், நட்பு, சோகம், நகைச்சுவை என எல்லாமும் கலந்து கட்டி அடிக்கும் இவரின் புத்தகத்தில். இந்த நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. இவரின் Five point someone நாவலை தழுவி எடுக்கப்பட்ட 3 இடியட்ஸ் மெகா ஹிட்டடித்தது. இந்த நாவலின் உரிமையையும் வாங்க கடும் போட்டி என்று செய்தி. ஒரு முழு நீள மசாலா படம் பார்த்த அனுபவத்தை தரும் இந்நாவலின் கதை -----



வாரணாசியில் கங்கா டெக் நிர்வாகவியல் கல்லூரி திறப்பதற்காக சேத்தன் சிறப்பு விருந்தினராக செல்கிறார். அந்த கல்லூரியின் நிறுவனர் கோபால் விழா முடிந்ததும் சேத்தனை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.அங்கு  கோபால் அளவுக்கு அதிகமாக மது அருந்தி மயக்க நிலைக்கு செல்கிறார். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரிடம், தன் கதையை கோபால்  சொல்வது  போல கதை விரிகிறது.

கோபால் -அம்மா இல்லாத அவனுக்கு அப்பாவின் தினசரி ரொட்டி போரடித்ததால்,பள்ளியில் பிரேயர் நடக்கும் நேரத்தில் ஆர்த்தியின்
கேக்கை எடுத்து தின்று விடுகிறான் . ஆசிரியையிடம் மாட்டிக்கொள்வதில் இருந்து மோதலுடன் ஆர்த்தியுடன் நட்பு ஆரம்பம் ஆகிறது.

பள்ளி பருவத்தில் இருந்தே கோபாலுக்கு ஆர்த்தியும், ஆர்த்திக்கு கோபாலும் தான் தோழர்கள். கோபாலின் தந்தையின் ஆயுள் அவருக்கு சொந்தமான நிலத்தை அவரின் சகோதரரிடம் இருந்த மீட்பதிலேயே கழிகிறது. அவருக்கு கோபாலை IIT  அல்லது NIT  யில் சேர்த்து இஞ்சினியர் ஆக்க வேண்டும் என்பது கனவு.

அதற்காக இரண்டு முறை முயற்சித்தும் தோல்வியே கிடைக்கிறது. ராகவும் அவனது பள்ளித்தோழன். அவன் IIT -JEE தேர்ச்சி பெற்று அந்த ஊரிலேயே IT -BHU  வில் சேர்கிறான்.

கோபால் இரண்டாம் முறை தேர்வு பயிற்சிக்காக கோட்டா சென்ற போது ஆர்த்திக்கும் ராகவுக்கும் காதல் மலர்ந்து விடுகிறது. கோபால் தேர்விலும் தோல்வியுற்று, காதலிலும் தோல்வியுறுகிறான். அவன் தந்தையும் அதே நேரத்தில் இறந்து விடுகிறார்.

ஆனாலும் ஆர்த்தியுடன் நட்பு தொடர்கிறது.அதுதான் அவனது ஒரே ஆறுதல். நண்பன் ஒருவன் தயவினால் உள்ளூர் MLA  வின் உதவியுடன் அவனது நிலத்தை மீட்கிறான். அந்த நிலத்தில் MLA  வின் பணத்தில் பொறியியல்  கல்லூரி ஒன்றை அமைக்கிறான்.

ராகவ் பத்திரிக்கை துறையில் நுழைந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவன். அந்த உள்ளூர் MLA  வின் கங்கை தூய்மையாகும் திட்டத்தில் செய்த ஊழலை வெளிக்கொண்டு வந்து அவர் பதவி விலக செய்கிறான்.

கோபாலின் உண்மையான , ஆழமான அன்பினால் ஆர்த்தி அவனிடம் தன் உடல் , மனம் இரண்டையும் இழக்கிறாள். ராகவை விட்டு பிரிய முடிவெடுக்கிறாள். அதற்காக ராகவை சந்திக்க கோபால் செல்கிறான்.அங்கு அரசியல்வாதிகளின் ஊழலால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் வாடும் ஏழைக் குழந்தையைப் பார்க்கிறான்.

அதன்பின் அவன் பங்களாவுக்கு வந்து அவனுள் என்ன மாற்றம் ஏற்படுகிறது? ஆர்த்தியுடன் அவன் சேர்ந்தானா என்பதே முடிவு.

நாவலின் சுவாரசியங்கள் :


IIT நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்காக மாணவர்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாதவை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே ஒருவன் பனிரெண்டாம் வகுப்புக்கான IIT  புத்தகங்களை படித்தாக வேண்டும். அப்பொழுதுதான் அவன் தேர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக நிறைய பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதற்காக மாணவர்களை படுத்தும் பாடு நிறைய.அவர்கள் சிறு வயது கொண்டாட்டங்களுடன் , இளமையும் சேர்த்தே கழிகிறது. IIT யில் வருடத்தில் சேர்வது கிட்டத்தட்ட 9000 மாணவர்கள் தான். அந்த அனைவருமே வாழ்வில் உயர்ந்ததாக, பெரிய பதவியில் இருப்பதாக தெரியவில்லை. 
அதன் நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் சேரவே தனி நுழைவு தேர்வு. அந்த நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்க சில பயிற்சி நிலையங்கள் என நிகழ் கால உண்மைகளை இந்நூல் அலசுகிறது.


நான் நான்கு வருட இஞ்சினியரிங் படிக்க ஆன பணம், அந்த பயிற்சி நிலையங்களின் ஒரு வருட கட்டணத்தை விட குறைவு. ஏழை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மிடில் கிளாஸ் குழந்தைகளுக்கே அது எட்டாக்கனிதான். என்னதான் படித்தாலும், ஏழை குழந்தைகளுக்கு IIT  வெறும் கனவாகவே தான் இருக்கும்.

பெற்றோரின் வற்புறுத்தலால் விருப்பே இல்லாமல் அத்தகைய பயிற்சிக்கு சேர்ந்து மூன்று வருட வாழ்க்கையை வீணாக்கும் பிரதிக் போன்ற எத்தனையோ மாணவர்கள் நம் நாட்டில் உண்டு.

பத்திரிக்கையில் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ராகவ் நினைத்தாலும், அவன் இஞ்சினியர் ஆக வேண்டும் என்று அவன் தந்தை கட்டாயப் படுத்துகிறார். இது இளைஞர்கள் அனுபவிக்கும் மற்றொரு இன்னல்...

தனி ஒரு மாணவன் ஒரு பத்திரிக்கையாளனாக பணி செய்வதற்கு அரசியல் வாதிகள் போடும் முட்டுக்கட்டைகள் மற்றொரு அத்தியாயம். அரசியல்வாதிகள்  கொடுக்கும் விளம்பரம் கிடைக்காதோ என எண்ணி , அவனை வேலையில் இருந்தே விரட்டும் பத்திரிக்கை, அவன் வெளியிட்ட செய்தியால் அவன் அலுவலகத்தை சூறையாடும் அரசியல்வாதியின் கைத்தடிகள் என நிறைய நிஜங்கள். ஆனாலும் ஒரு பத்திரிக்கையின்  ஆதாரமான உண்மை செய்தியால் மாற்றத்தை உண்டாக்க முடியும் என கதை ஆழமாக நிரூபிக்கிறது.

ஒரு கல்லூரி தொடங்க கொடுக்க வேண்டிய லஞ்சம் பற்றி  தெளிவாக சிவாஜி படத்தில் பார்த்தோம். இதிலும் கல்லூரி கட்டுவதில் ஆரம்பித்து, ஆசிரியர் நியமனம் முதல் அதிகாரிகளின் விசிட் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலையை படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்.

எல்லாம் விட இந்த நாவலின் சிறப்பம்சம் ஆர்த்தி - கோபால் உண்மையான காதல். கங்கை நதிக்கரையில் படகு சவாரி செய்வதில் இருந்து சினிமா, காபி குடிக்க செல்வதிலிருந்து பள்ளி நேரம் வரை எல்லா நேரமும் இருவரும் சேர்ந்தே வளர்கிறார்கள், வாழ்கிறார்கள். கோபால் கோட்டா சென்ற நேரத்தில் ஆர்த்தியுடன் ராகவுக்கு ஏற்படும் காதலினால் பொங்குவதும், அதனால் ஆர்த்தியுடன் சண்டையிட்டு பிறகு அவள் நினைவு எழுந்து மீண்டும் சமாதனம் ஆவது என நிறைய கவிதை எபிசோடுகள்.

ஆர்த்தி ராகவை காதலித்தாலும்  கோபாலிடமே நீண்ட நேரம் செலவளிக்கிறாள். பெண்களின் மனதை புரிந்து கொள்வது கடினம் இல்லை என்பதை கோபால் நிரூபிக்கிறான். அவளின் மனதை ஒவ்வொரு கணமும் புரிந்து கொள்கிறான். முதல் முறை படகில் முத்தம் இட்ட பிறகு, அவளிடம் மீண்டும் சந்திக்கலாமா என கேட்கிறான்.   அவள் ஏன் ? எப்பொழுது ? என கேட்காமல் எங்கே என கேட்பதில் இருந்து, அவளின் மறு முத்ததிற்கான சம்மதத்தை உணர்கிறான்.

இப்படி ஆர்த்தி, கோபாலின் காதல் நாவல் முழுக்க நட்பு, கோபம், ஊடல், கூடல் என பல பரிணாமத்தில் மிளிர்கிறது.
ஆனால் இந்த நாவலின் முடிவு, எல்லோரும் விரும்புவார்களா என தெரியவில்லை. சேத்தனின் முந்தய நாவல்களைப்போல இதுவும் மகிழ்ச்சியான முடிவாகவே இருந்திருக்கலாம் என்பது எனது எண்ணம் .
மொத்தத்தில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை விடாமல் படிக்க தூண்டும் ஒரு மசாலா நாவல் - Revolution  2020 

Wednesday, November 02, 2011

சிறு கவிதைகள்

வெயில்
மதிய வேலையில் நடக்கும்பொழுது
வெயில் என்று மூடிக்கொள்கிறாய் முகத்தை
உன் முகம் காணாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரிக்கிறது சூரியன்.

துரதிஷ்டம் 

 உன்  முகம் காணாத நாட்களை
மறுநாள் தேதி கிழிக்கும்போழுது பார்க்கிறேன்
ராசிபலனில் துரதிஷ்டம்

வாசனை

நீ தலை குளித்தவுடன்
எழும் வாசனையில்
பூக்கள் தலைக்குனிவுடன்
ஒப்புக்கொள்கிறது தன தோல்வியை .

நீலம்
வான நீல வண்ணம்
எனக்கும் பிடிக்கும் என்றாய்
இப்போதெல்லாம் நான் வானத்தை
பார்க்கிறேன் பொறாமையாய். 




செருப்பு
காலம் காலமாக மிதிபட்டே வந்தபோதும்
கல்லும் முள்ளும் குத்தி காயப்பட்டபோதும்
வாசலிலேயே நிறுத்தி அவமானப்படுத்தப்பட்ட போதும் 
போராட திராணியற்ற  செருப்பும்  
தாழ்த்தப்பட்ட சாதியோ !
பெண் சிசு 
வகை வகையாய் வரிசையுடன்
வளைகாப்பு கொண்டாடி
குடும்பம் கூடி சீட்டெடுத்து
செல்லப்பெயர் கண்டெடுத்து
குங்கும பூவும் இன்ன பிறவும்
குடம் குடமாய் கொண்டு வந்து
மாநகரில் மிகச்சிறந்த
மருத்துவமனையில் வந்துசேர்த்து
தாய்சேய் நலப்பிரிவில்
ஸ்கேன் பண்ணி பார்த்த பிறகு
தாய் மட்டும் நலமா
வந்து சேர்ந்தா வீட்டுக்கு .

புத்தாண்டு கொண்டாட்டம்

யாம வேலையில் மிகுந்தது
வாலிபர் கூட்டமங்கே
விண்ணைப் பிளந்தது அதிர்வேட்டுகள் நாதம்
உணவு கொட்டி விளையாடினோர் ஓர் புறம்
ஆங்கே கூழுக்கும் வழியில்லை சேரிப்புறம்
கட்டித்தழுவினார் இருபாலர் வாஞ்சையோடு
அங்கே கதறி அழுதது நாட்டின் கலாச்சாரம்
Happy New Year  என ஐநிலங்களிலும்
பறந்தது குறுஞ்செய்தி - ஆங்கே
விரைந்து அடிக்கப்பட்டது தமிழுக்கு இறுதிமணி
எத்தனையாண்டு பல வந்தாலும்
இக்காட்சி மாறாது என் தாய்த்திருநாட்டில். 

இணைய வலை

படம் பார்க்கலாம் என கிளம்பி
பளபள ஆடை உடுத்தி
பட்டென்று அமர்ந்தான் கணினி முன்னே.


அழுக்கு லுங்கி அணிந்துகொண்டு
வாராத தலையுடன் துலக்காத பல்லுடன்
காட்டான்குப்பதில் அமர்ந்து கடகடவென அடித்தான்
"I m Victor frm USA"- குப்பனாகிய அவன் .

சில வருடம் மிதிவண்டி
சில நாள் நண்பனின் பைக்
பல நாள் பின்தொடர்வு என
பல வலை வீசியும் மயங்காத அவள்
ஒரே வாரத்தில் வீழ்ந்தால்
இணைய வலையில்.

இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும்
பல நிறுவனங்கள் அறிவிப்பு
அந்த தளம் எந்த ஊரில் என அறியாமையில்
குக்கிராமத்தில் நான்.

தேர்வில் என்பதுக்கு மேல்  என
காலம்காலமாக அப்பாவிடம் விட்ட கதை
கந்தலாகிப்போனது இணையத்தில்
முடிவுகள் பார்த்த அவரிடம். 

வாலிப வாரம்

சித்திரை முதல் பங்குனி வரை
எந்தத் திங்களிலும் புத்தகத்தை தொடாமல்
நித்திரையிலே மூழ்கி

வாழ்விலே என்றாவது முன்னேறுவேன் என
செவ் வாயாலே வெறும் வார்த்தைகளை வீசி

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது  என
கிடைத்த பெண்களின் பின் சுற்றித்திரிந்து

சூரிய குடும்பத்திலே பெரிய கோள் வியாழன்
எனது ஊரிலே பெரிய ஆள் நான் என
வாய் நிறைய வியாக்கியானம் பேசி

வெள்ளி நிற வண்டியிலே இரவு முழுதும்
ஊர் சுற்றி திரிந்து ஓய்ந்து

'' இந்த சனி பிடிச்ச கழுத எங்க உருப்பட போவுது" என
ஊர் உலகத்திடம் வசவுகள் வாங்கி

தன வாழ்விலும் ஞாயிறு மலருமென
கனவிலே மிதந்தான் கல்லாத மூடன். 

மொழி - சிறுகதை

அதிகாலை 4 .30  மணிக்கு நாக்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது ரகுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ரயில் நிலையத்தில் எழுதி இருந்த வாசகங்கள், அந்த மனிதர்கள் பேசிக்கொண்டிருந்த மொழிகள், அந்தக் காலை நேரத்திலும் ஆவி பறக்க விற்றுக்கொண்டிருந்த போஹா என அனைத்தும்.அவன் தன்னருகில் இருந்த சுரேஷை திரும்பிப்பார்த்தான். அவனுக்கும் அதே உணர்வு.

ரகு, சுரேஷ் இருவரும் கல்லூரி முடித்துவிட்டு வளாகத்தேர்வின் மூலம் ஒரு MNC நிறுவனத்தில் கிடைத்த  வேலையில் சேர நாக்பூர் வந்திருப்பவர்கள். நாக்பூரில் மராத்தி பேசுவார்களா , ஹிந்தி பேசுவார்களா என்ற குழப்பம் அவர்கள் முகத்தில் துளியும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு இரண்டுமே தெரியாது. 

30 நாட்களில் ஹிந்தி புத்தகம் ஒன்றை 20  ரூபாய் கொடுத்து வரும் வழியில் வாங்கியதன் பயனாக அவர்களுக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் பரிச்சயமாகி இருந்தது. நிறுவனத்தின் பனி நியமன ஆணையுடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் முகவரியும் இருந்த கடிதத்தை கையில் எடுத்துக்கொண்டான் ரகு.

ரயில் நிலையத்தின் வாசலை தனக்கு முன்னே சென்று கொண்டிருந்தவரின் துணையுடன் அறிந்துகொண்டனர். வாசலில் ஜெர்க்கின் அணிந்திருந்த ஒரு ஆட்டோ டிரைவர் இவர்களை நோக்கி வந்து , சுரேஷின் கையைப்பிடித்து இழுக்காத குறையை தனது ஆட்டோவுக்கு கூட்டிச்சென்றான்.

"கஹாங் ஜானா ஹை பாய் ?"

ரகு தன கையில் இருந்த கவரை அவன் முன் நீட்டினான்.

" உதர் ஜானே கே ஏக் சௌ ருப்யா (நூறு ரூபாய்) லகேகா ?"

" நஹி நஹி . ஒன் ஹண்ட்ரட் அண்ட் பிப்டி ஒன்லி " - சுரேஷ் பேரம் பேசிய திருப்த்யில் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.

"மச்சி. எப்டிடா ஹிந்தி அதுக்குள்ள உனக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சி ?" - ரகுவின் கேள்வி சுரேஷின் மனதுக்குள் சிறிது நேரம் பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டது.

வட இந்திய  காலை நேர குளிர் அவர்கள் உடலை சில்லிட செய்தது. நிறுவன கடிதத்தில் வரும் பொழுது கொண்டு வரச்சொன்ன ஜெர்க்கின் அப்பொழுது அவர்களுக்கு அவசியமாய் இருந்தது .இருவருக்குமே ஜெர்க்கின் அணிவது அதுதான் வாழ்வில் முதல் முறை.

அறைக்கு வந்தவுடன் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில்  ஒவ்வொரு சேனலாக மாற்றிப் பார்த்தனர். தொண்ணூறு சேனல்களில் ஒன்று கூட தமிழ் சேனல் இல்லை. பயணக்  களைப்பை விட இது அவர்களுக்கு பெரிய களைப்பைத் தந்தது.

மறுநாள்தான் கம்பனியில் சேர வேண்டி இருந்ததால் , சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மதிய உணவிற்காக அருகில் இருந்த மெஸ்ஸுக்கு சென்றனர்.அங்கெ அவர்களுக்கு எண்ணையில் போடாத ரொட்டியும், டாலும் காத்திருந்தது .வேறு என்ன அங்கு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள அவர்களுக்கும் ஆசைதான். ஆனால் எப்படி கேட்பது, யாரிடம் கேட்பது என்று நினைக்கும் போதே அவர்களுக்கு பசி பாதி போய்விட்டது.

சிக்கன் இருந்தால் பரவாயில்லை என ரகுவிற்கு தோன்றியது. ஆனால் சிக்கனுக்கு ஹிந்தியில் என்ன என்று தெரியவில்லை. முட்டைக்கு அண்டா என புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது.

"பையா ! அண்டா கா அம்மா ஹை ?"
" க்யா?" - கடைக்காரன் ஆச்சர்யமாக பார்த்தாலும் அவர்களின் சைகையைக் கண்டு குறிப்பறிந்து விட்டான். 

" ரகு. ஹிந்தி தெரியாம ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்குடா. சின்ன வயசுல படிக்காம விட்டது தப்ப போச்சுடா"
"இங்க வந்துட்டம்ல. இன்னும் ரெண்டு மாசத்துல கத்துக்கலாம்டா .இதுக்கு ஏன்டா பீல் பண்ணனும் "
"அப்படி இல்லடா. மூணாவது மொழியா இத படிச்சி இருந்தா இப்ப உதவியா இருந்திருக்கும் இல்லடா. எல்லாம் நம்ம அரசியல்வாதிங்க பண்ணனது தாண்டா "
"அது எப்டிடா  சுரேஷ்.இன்னைக்கு தமிழ் நாட்டுல கட்டட கூலி வேலை செய்றவங்க, குறைஞ்ச சம்பளத்துக்கு கெடைக்கிராங்கனு தமிழ் நாட்டு கம்பனியில வேல பாக்கிறவங்க, பேங்க், PSU , மத்த மதிய அரசாங்க அலுவலகத்துல வேல பாக்கிறவங்கனு நம்ம மாநிலத்துல இருக்க ஹிந்தி பேசறவங்க எண்ணிக்கையும், தமிழ் நாட்டுல இருந்த இங்க வரவங்க எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்னாதாண்டா இருக்கும். அப்ப மத்த மாநிலத்துக்காரங்க எல்லாத்தையும் தமிழ் படிக்க கட்டாயம்னு சொல்லலாமாடா?"
"இப்பிடி பேசிப்பேசியே தாண்டா நாசமாப் போய்ட்டோம்.என்னமோ போடா"


Monday, October 31, 2011

அணு அணுவாய் - சவால் சிறுகதை போட்டி 2011

ரெயின் கோட் அணிந்த அந்த பெரிய உருவம் ஹோட்டலின் அதிகாரி அறையை நோக்கி நகர்ந்தது. 

"யாருய்யா , மொதல்ல பார்த்தது ?"

ஷர்ட்டும் லுங்கியும் அணிந்திருந்த அந்த அதிகாரி பவ்யமாக கை கட்டிக்கொண்டு பதில் அளித்தார் ."நைட் ஷிப்ட் முடிஞ்சு போற பையன் ரூம் செக் பண்ண காலைல போனப்ப இந்த ரூம் கதவு தொறந்து இருந்திருக்கு. உள்ள எட்டி பாத்தப்ப இவர் எந்த சலனமும் இல்லாம இருந்தத பாத்துட்டு என்கிட்ட சொன்னான் சார். அதான்  உங்களுக்கு போன் செஞ்சேன் சார்."
"என்ன அட்ரஸ் கொடுத்து இருக்கார்?".
" Dr. Rahul Gupta 
   Scientist - F,
   H-2, Homi Babha Colony,
   IGCAR, Kalpakkam"

எஸ்.பி கோகுல் IPS  என்று பொறிக்கப்பட்ட  கதவை தள்ளிக்கொண்டு வேகமாக நுழைந்தார் அந்த விசாரணை அதிகாரி.

காவல் உடையின் கம்பீரத்துடன் அமர்ந்திருந்த எஸ்.பி கனைத்துக்கொண்டே கேட்டார். "என்ன எசக்கி, எதாவது தகவல் கெடச்சுதா?. கேஸ் ரொம்ப முக்கியமானது. இறந்து போனது இந்திய அணுசக்தி கழக விஞ்ஞானி . மேல் இடத்துல இருந்து போன் மேல போன் வந்துட்டு இருக்கு. ஸ்பெசலா சி.பி ஐ ல இருந்து விவேக்னு ஆபீசர இந்த கேஸ் விசாரணைக்காக அனுப்பி இருக்காங்க."

"இறந்து போனவர் முகவரிக்கு போய் பாக்க சொல்லி  கல்பாக்கம் போலீஸ் கிட்ட சொல்லியாச்சு சார். ஹோட்டல்ல அந்த அறையை முழுசா செக் பண்ணியாச்சு சார். அவர் சூட் கேஸ் தவிர எந்த தடயமும் கெடைக்கல. அது அணுசக்தி துறை சம்பந்தமா கொஞ்ச புத்தகம், அவர் துணிகள், அப்பறம் ரிடர்ன் டிக்கெட் இதுதான் இருந்துச்சு சார். அவர் பாடிய போஸ்ட் மார்ட்டம் பண்ண அனுப்ப போறோம் சார். அது வந்தா தான் அவர் சாவு இயற்கையானதா இல்ல கொலையானு தெரியும் சார்."

"OK.Proceed" சொல்லிவிட்டு அலறிக்கொண்டு இருந்த தொலைபேசியை எடுத்து தன் காதுக்கு கொடுத்தார்.

வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து  தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த காரில் விவேக்கும், விஷ்ணுவும் வந்துகொண்டிருந்தார்கள்.
" விஷ்ணு, நீ கேஸ தனியா டீல் பண்ணு. சந்தேகப்படற மாதிரி எது இருந்தாலும் எனக்கு சொல்லு. நம்ம ரெண்டு பெரும் சந்திக்கிறத முடிஞ்ச அளவுக்கு தவிர்த்துடு. கேஸ சீக்கிரம் முடிக்கணும் ."
" ஓகே பாஸ். நான் மொதல்ல போயி அந்த ஹோட்டல்ல எதாவது துப்பு கெடைக்குதான்னு பாக்கறேன். "

விஷ்ணு அந்த ஹோட்டலுக்குள் நுழைந்த போது அதன் தினசரி பரபரப்பில் தன்னை இணைத்துக்கொண்டு இருந்தது.

" விஷ்ணு ப்ரம் சி.பி.ஐ. அந்த அறையை நன் செக் பண்ணலாமா ?"
" ஷூர் சார்" . அறை சாவியை எடுத்துக்கொண்டு விஷ்ணுவின் வேக நடையை பின் தொடர்ந்தார் அந்த ஹோட்டல் அலுவலர்.
விஷ்ணு அறை முழுவதையும் தேடிக்கொண்டிருந்த போது, கட்டிலின் கீழ் அது கிடந்தது. அதை எடுத்து பத்திரப்படுதிக்கொண்டார்.


"விஷ்ணு , போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் விஞ்ஞானி உடம்புல எதோ மர்ம விஷம் இருக்குனு சொல்லி இருக்கு. அது என்னனு பாரன்சிக்ல கொடுத்து கேட்டப்ப, அது அணு கதிர் வீச்சு வகைய சேர்ந்த ஒரு வகை நச்சுனு சொல்றாங்க.உனக்கு எதாவது தகவல் கெடச்சு இருக்கா? "

" பாஸ். நேத்து அந்த அறைக்கு  நான் போனப்ப அங்க சயின்டிஸ்ட் விசிடிங் கார்ட் கெடந்துது , அது பின்னால ஒரு ரகசிய குறியீடு இருந்துது. "

" அது என்ன அது. நீ எடுத்தது யாருக்காவது தெரியுமா ?"

" அந்த ஹோட்டல் மேனேஜர்  கூடவே வந்தான். அவன் எப்படியும் எஸ்.பி கிட்ட சொல்லிடுவான்னு நான் எஸ்.பி க்கும் அந்த குறியீட அனுப்பி வச்சுட்டேன். "
"அவசரப்பட்டுடியே விஷ்ணு. அந்த சயின்டிஸ்ட் மொபைல் நம்பர ட்ரேஸ் பண்ணணப்ப அதுல எஸ்.பி கோகுலுக்கு 4 கால் போயிருக்கு. அதனால அவரையும் சந்தேக லிஸ்ட்ல வச்சிருக்கேன்."

"நம்ம சி.பி.ஐ கத்துக்கொடுத்த முதல் பாடமே எல்லாரையும் சந்தேகப்படு தான் சார் .  உங்க மெய்லுக்கு அவருக்கு அனுப்பின குறியீட அனுப்பி இருக்கேன். அதுல இன்னொரு தகவலும் இருக்கு. அத கொஞ்ச புத்திசாலித்தனமா அனுப்பி இருக்கேன். பாத்துக்கங்க சார். "

விவேக் மெயிலில் இருந்து எடுத்த பிரிண்டில் நமிதாவின் கலகல பேட்டிக்கு நடுவில் இருந்து இரண்டு செய்தி துண்டுகளை ஸ்கேலால் வெட்டி எடுத்தார். விஷ்ணுவின் விளையாட்டுத்தனத்தை நினைத்து சிரித்துக்கொண்டே அந்த துண்டுகளை மேசை மேல் வைத்தார்.


"Sir.எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு."
"Mr .கோகுல் S W H2 6F.இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு."
  
படித்துக்கொண்டு இருக்கும்போதே விஷ்ணுவின் அழைப்பு மொபைலில் வந்தது.
" சார். கேஸ் கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரி. எனக்கு கெடச்ச குறியேடு R C H2 6F . இத வச்சி ராஜீவ் காலனில வீட்டு நம்பர் 2 , சிக்ஸ்த் ப்ளோர் போனப்ப, அந்த சின்ன  வீட்ல யாரும் இல்ல. அங்க உள்ள நுழைந்து செக் பண்ணி பார்த்தப்ப ஒரு லெட்டர் கெடைச்சுது சார். அத எடுத்துட்டு எஸ்.பி ஆபிஸ் வரேன் நீங்களும் வந்துடுங்க சார். "
அழகான கை எழுத்தில் எழுதப்பட்ட அந்த கடிதத்தை விஷ்ணு உரக்க படிக்க விவேக், எஸ்.பி உட்பட அனைவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர்.


"இந்திய அரசாங்கத்துக்கு ,
உங்கள் நாட்டின் கடைக்கோடியில் உள்ள சபிக்கப்பட்ட தமிழ் திருநாட்டின் குடிமகன் எழுதுவது.உலக நாடுகள் எல்லாம் ஒதுக்கி தள்ளிய , கேரளா, மேற்கு வங்க அரசுகள் வேண்டாம் என்று தள்ளிய அணு உலைகளை எங்கள் தமிழ் மண்ணில் நிறுவுவதால் நாங்கள் சபிகப்பட்டவர்கள்தான்.அணு சக்தியின்  கோர முகத்தை ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகியின் மூலம் காட்டியதோடில்லாமல் இப்பொழுது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்து காட்டியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அணுவின் ஆட்டத்தை அனுபவத்தின் மூலம் கண்டு அணு உலைகளை மூடிக்கொண்டிருக்கிறது.இது அனைத்தும் தெரிந்தும் நீங்கள் யாரையோ திருப்திபடுத்த சொந்த நாடு மக்கள் மீதே அணு உலைகளை திணித்து வருகிறீர்கள். எங்கள் அமைதியான 20 ஆண்டு கால போராட்டம்  உங்கள் மனதில் எந்த வித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. அத்தகைய அணு உலைகளின் தீமைகளை மறைத்துவிட்டு , நன்மைகள் என்ற பெயரில் பசப்புரைகளை பரப்ப உங்களால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ராகுல் குப்தாவுக்கு அணு கதிரின் தீமைகளை உணர்த்தும்  வகையில் கதிர் வீச்சு நிறைந்த வேதிப்பொருளை அவர் உடம்பில் செலுத்தி உள்ளேன். இது போன்ற அணு கதிர் எம்மக்களின் மீதும் வீசும் காலம் வெகு தொலைவில் இல்லை. இப்போதாவது அணு உலைகளின் விஷத்தன்மையை அரசு உணர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.இந்த கொலையை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான் அந்த இடத்தில என் முகவரியை ரகசிய குறியீடாக எழுதி வைத்து சென்றேன்.  ஒரு உயிரை பறிக்கும் காரியத்தை செய்து விட்டு இனி என்னால் நிம்மதியாக வாழ இயலாது. எனவே நானும் என் உயிரை நானும்  மாய்த்துக்கொள்கிறேன். என் கண்ணை எடுத்து தானம் செய்யுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், அதில அணு கதிர் வீச்சு  இல்லாத என் தாய்த்திருநாட்டைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கையுடன்".

Sunday, July 17, 2011

Deivathirumagal (தெய்வத்திருமகள் )விமர்சனம்

மதராசப்பட்டினம், பொய் சொல்ல போறோம் போன்ற மென்மையான படங்களின் இயக்குனர் விஜயின் இயக்கத்தில் வந்திருக்கும் படம். 
மன வளர்ச்சி குன்றிய ஒரு தந்தைக்கும் , ஒரு குழந்தைக்கும் இடையிலான பாசப்போராட்டம் தான் கதை.
ஊட்டி அருகில் இருக்கும் அவலாஞ்சி எனும் கிராமத்தில் ஒரு பேக்கரியில் வேலை பார்க்கும் விக்ரமுக்கும், பானுவுக்கும் பிறக்கும் குழந்தை நிலா. பானு இறந்த பிறகு குழந்தையே உலகம் என இருப்பவனிடமிருந்து குழந்தையை பிரித்து சென்று விடுகின்றனர் பானுவின் அப்பாவும், அமலா பாலும். வக்கீல் அனுவின் உதவியுடன் அந்த குழந்தையை விக்ரம் மீட்கிறாரா என்ன என்பது மீதி கதை. 
மன நலம் குன்றிய பாத்திரத்தில் விக்ரம். அவர் நடிப்பை பற்றி சொல்வது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போன்றது. நடை, பாவனை , பேச்சு என அனைத்து விதத்திலும் அசத்துகிறார். குழந்தை பிறந்தது அறிந்து மகிழ்வதும் , பானு இறந்தாள் என கேட்ட அடுத்த வினாடியே முகத்தில் வித்தியாசத்தை காட்டுவதும் , இறுதி காட்சியில் நீதி மன்றத்தில் குழந்தையுடன் சைகையில் பேசிக்கொள்வது, கதை எதுவும் தெரியாமல் குழந்தைக்கு கதை சொல்லும் காட்சி என விக்ரம் தான் ராஜாங்கத்தை படம் முழுதும் நிகழ்த்தி இருக்கிறார். கடைசி காட்சியில் படம் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டது அவரின் நடிப்புக்கு சாட்சி .
.
நிலாவாக வரும் குழந்தை அத்தனை அழகு, நடிப்பிலும்.
'' நல்லவங்க சாமிகிட்ட போவாங்கனு சொல்றியே, அப்ப நீ நல்லவன் இல்லையா. ". என குழந்தை கேட்கும் கேள்விகளை கேட்கும் இடத்தில் அத்தனை வசீகரம்.
" யானை என் குண்டா இருக்கு " என நிலா கேட்பது  , " அது நெறையா சாப்பிடுது" என விக்ரம் சொல்வது. இப்படி படம் நிறைய குழந்தைகள் உலகத்தின் பதிவுகள் நிறைய.
பள்ளி போட்டியில் ஒரு குழந்தை ரைம்ஸ் தெரியாமல் முழிக்க, அது பரிசு பெரும் போட்டி என நினைக்காமல் அந்த குழந்தைக்கு ஓடி போய் சொல்லிக்கொடுப்பது என குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.
தந்தையிடம் பேசுவதாக நிலாவிடம் பேசுவது,கரஸ்பாண்டன்ட்டை டினோசர் என அழைப்பது  , இறுதி காட்சியில் விக்ரமை பார்த்ததும் சந்தோசத்தில் நம்மையும் மகிழச்செய்வது என நிலா அனைவரயும் கவர்கிறாள். 
குழந்தையுடன் விக்ரம் பேசும் வெகுளித்தனமான வசனங்களில்  வசனகர்த்தா தெரிகிறார். 
" டாக்டர்கிட்டயும்  வக்கீல்கிட்டயும்தான் பொய் சொல்லக்கூடாது, ஆனா டாக்டாரும் வக்கீலும் பொய் சொல்லலாம் " என படம் முழுக்க நம்மை கடந்து செல்லும் நல்ல வசனங்கள் நிறைய .
அனுஷ்காவின் இடுப்பை விட நடிப்பு நன்றாகவே இருக்கிறது. கேஸ் கிடைக்காமல் திண்டாடுவதும், விக்ரம் நிலா காணாமல் போனதை விவரிக்கும்போது அறுவை தாங்காமல் தப்பிக்க சந்தானத்துடன் பிசியாக இருப்பது போல காட்டிக்கொண்டு எஸ்கேப் ஆவது, பின்பு விக்ரமின் உண்மை நிலை அறிந்து அவருக்காக நாசருடன் மோதுவது என அவ்வளவு அழகு. நெற்றியில் திருநீறு கீற்றலுடன் அழகாக இருக்குகிறார். 
அவருக்கும் அவரது தந்தைக்குமான உரசல்களும், விக்ரம் வந்த பின்பு அது சரி ஆவது என அது ஒரு சின்ன கவிதை. 
ஊட்டியில் பாஸ்கர் மனைவி மேல் சந்தேகப்படுவதாக வரும் கதை தேவை இல்லாததாக தோன்றினாலும் உறுத்தவில்லை . 
அனுஷ்காவின் தோழியாக வருபவரின் காதல் கதை, சந்தானத்தின் டைமிங் என சீரியசான கதையில் நகைச்சுவையும் கதையை கெடுக்காமல் நன்றாகவே இருக்கிறது. 
அமலா பால் , கார்த்திக் என கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள். அமலா பால் அழகாக இருக்கிறார் என்பது கொசுறு செய்தி.  
ஊட்டியின் அழகை நீரவ் ஷாவின் கேமரா அழகாக காட்டுகிறது. விக்ரம் கட்டிபிடித்தவுடன் வரும் அந்த பட்டு தேவை இல்லை என்றாலும், கேமரா கோணங்களும், சைந்தவியின் குரலும், அனுஷ்காவும் இருப்பதால் அப்படி ஒரு உணர்வு வராமல் இருக்க செய்கிறது.
ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையில் சில இடங்களில் நெகிழ வைக்கிறார். விக்ரம் கதை சொல்லும் பாடல், குழந்தைக்கு பொருள் வாங்க செல்லும்போது வரும் பாடல் என கதையின் ஓட்டத்திலே அனைத்து பாடலும் வருவது நன்றாக இருக்கிறது. 
விக்ரமின் மனைவியாக வருபவரை காட்டமல் வசங்கள் மூலமாகவே அவர்களின் உறவை சொல்வதும், அவரின் புகைப்படத்தை மங்கலான வெளிச்சத்தில் காட்டுவது என அவரை காட்சிப்படுத்திய விதம் அழகு. 
எந்த இடத்திலும் உறுத்தாத நடிப்பு, லாஜிக் மீறாத திரைக்கதை , சரியான நடிகர்கள் தேர்வு என விஜயின் உழைப்பு நன்றாக தெரிகிறது. 
அன்பை, பாசத்தை எத்தனையோ படங்கள் எத்தனையோ விதத்தில் சொன்னாலும், இது கொஞ்சம் புதுசு.
எத்தனை அவசரம் என்றாலும் சிக்னலில் பச்சை விளக்கு வந்தபின் செல்வது , பொய் சொல்லாதது , ஏமாற்ற தெரியாதது என குழந்தைகள் உலகத்தை காட்டி இருந்தாலும், அதன் மூலம் நாம் கற்க வேண்டியது எவ்வளோ இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
இது குழந்தைகளுக்கான படம் மட்டும்  அல்ல, நாம் குழந்தைகளாக மாற வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் படம்,
ஒரு மென்மையான கதையை இத்தனை அழகாய் சொன்ன இயக்குனருக்கு தான் அத்தனை பெருமையும். வெட்டு, குத்து, காமம் என தடம் புரண்டு கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு நிறைய திருமகள்கள் வர வேண்டும் 
தெய்வதிருமகள் -  அள்ளி அனைத்து கொஞ்சப்பட வேண்டியவள். 

Sunday, December 26, 2010

எனக்கு பிடித்த பாடல்கள் - 2010

2010 இல் வெளியான பாடல்களில் எனக்கு பிடித்தவை :
1 . உன் பேரை சொல்லும்போதே - அங்காடி தெரு
   இந்த பாடல் வெளியான போதில் இருந்தே கேட்டு கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருடமாக என் மொபைலில்  இருந்த பாடல். ஸ்ரேயா கோஷல் கொஞ்சும் குரலில் காதல் வழியும் பாடல்.
 " உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்"
" நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்"
  முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்" அருமையான வரிகள்.

2 . என் காதல் சொல்ல - பையா
   பொதுவாக யுவன் பாடும் பாடல்கள் நான் விரும்பி கேட்க மாட்டேன். இந்த பாடும் வெளிவந்து நீண்ட நாட்களாக நான் கேட்காமலே இருந்தேன். ஆனால் படம் வந்த பிறகு அது படமாக்கப்பட்ட விதத்தை பார்த்த பிறகும், வரிகளை கேட்ட பிறகும் தொடர்ந்து கேட்க ஆரம்பித்து விட்டேன்.
3 . மன்னிப்பாயா - விண்ணைத்தாண்டி வருவாயா 
  பொதுவாக  ரஹ்மான் பாட்டு லடே பிக் அப் ஆகும் என்று கொஞ்ச நாள் கேட்காமலே இருந்தேன். ஆனால் கேட்க ஆரம்பித்ததில் இருந்து தினமும் கேட்டு கொண்டு இருக்கிறேன். தாமரை எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆசிரியை. அதுவும் ஈழப்போர் நடந்த சமயத்தில் அவர் பேசியவைகளை கேட்க அருமையாக இருக்கும். காங்கிரசையும் சோனியாவையும் அவர் கேட்கும் கேள்விகள், ஈழத்து வலிகளை அவர் விவரிக்கும் விதம் என நான் அவர் ரசிகன். அவருடைய  பாடலில் நல்ல தமிழ் இருக்கும். இந்த பாடலிலும் வரிகள் அருமையாக இருக்கும்.
" ஒரு நாள் சிரித்தேன் ஒரு நாள் வெறுத்தேன்
  உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேன் மன்னிப்பாயா"
 ஸ்ரேயா கோஷலின் தேன் குரலில் மனதை மயக்கிய பாடல்.
4  . கிளிமஞ்சாரோ - எந்திரன்
     சங்கீத மகா யுத்தம் பார்க்க தொடங்கிய பிறகு சின்மயி பிடித்துப்போனதால் எந்திரன் படப்பாடல்களில் முதலில் கேட்க ஆரம்பித்த பாடல். சின்மயி குரலில் அவர் பாட்டுக்கு பாட்டு வாய்ஸ் மாடுலேசன் செய்வதாக தோன்றுகிறது.
5 . கை வீசி - நந்தலாலா
  படத்தில் வரும் என்று எதிர்பார்த்த  பாடல், ஆனால் வரவில்லை. இதுவும் அங்காடி தெரு போல பாடல் எப்போதோ வெளியானது. அப்பொழுதில்  இருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். விஜய் யேசுதாஸ், ஸ்வேதா (சுஜாதா மகள் ) பாடிய பாடல். அந்த கால ராஜா டூயட் திரும்ப கேட்ட மாதிரியான உணர்வை கொடுத்தது.
நிஜமாகவே ஒரு மனதை மயக்கும் மெலடி.
6 . ஜிங்கு சிக்கு - மைனா
  நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மண் வாசம் வீசும் கிராமிய பாடலை கேட்ட திருப்தி கொடுத்த பாடல்.
7 . நான் போகிறேன் - நாணயம்
   SPB , சித்ரா கூட்டணியில் வந்த அருமையான பாடல். இந்த பாடல் பற்றி  பாடல் வரிகளுடன் ஒரு போஸ்ட் எழுதியுள்ளேன்.
8 . இது வரை இல்லாத - கோவா
      கோவா என்ற மொக்கை படத்தில் உருப்படியான ஒன்று இந்த பாடல்.ஆண்ட்ரியா   போலவே அவரது குரலும் செசியாக இருக்கும். airtel சூப்பர் சிங்கர் போட்டியில் வென்ற அஜீசும் நன்றாக பாடி இருப்பார் .
9  . பூக்கள் பூக்கும் - மதராசபட்டினம் 
     GV  பிரகாஷின் இந்த வருட மெலடி இது. பாடல் வரிகளும் அருமையாக இருக்கும். இந்துஸ்தானி, கர்நாடிக்,  வெஸ்டர்ன் எல்லாம் இந்த பாட்டில் வரும் என்றார்கள். எனது அதை பற்றி எல்லாம் தெரியாது. ஆனால் கேட்டுக்கொண்டே இருக்க வைத்த பாடல் இது.
" நேற்று வரை நேரம் போக வில்லையே
  உனதருகே நேரம் போத வில்லையே:"
"இரவும் விடிவதில்லையே அது விடிந்தால் பகலும் முடிவதில்லையே "
"இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்"
ஹரிணி, ரூப் குமாரின் குரலின் அருமையான வரிகள்.
 

Sunday, December 12, 2010

வித்யாசாகரின் பாடல்கள்

பாடல் - மௌனமே பார்வையாய்
படம் - அன்பே சிவம்
பாடியவர்கள் - எஸ். பி. பாலசுப்ரமணியம், சந்த்ராயி

இந்த பாடல் படத்தில் வராது. ஆனால் பூ வாசம் பாடலுக்கு கொஞ்சமும் சளைக்காத மெலடி இது. நான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தீவிர ரசிகன். அதனால் எந்த படத்தில் பாலா சாரின் பாடல் வந்தாலும் கேட்காமல் விட மாட்டேன். இப்போது ஆடுகளத்தில் அய்யய்யோ நெஞ்சு அலையுதடி பாடல் தான் இப்பொது நான் முணுமுணுக்கும் பாடல். ஆடுகளத்தில் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் பாடும் யாத்தே யாத்தே , ஒத்த சொல்லால போன்ற பாடல்களும் நன்றாகவே இருக்கிறது. இந்த மௌனமே பாடல் அந்த கால ராஜா பாடலை போன்ற ஒரு இதமான மெலடி . எஸ்.பி. பியின் கொஞ்சும் குரலில் பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்.
பாடல் வரிகள் :
Mounamae paarvaiyaay paesi kondoam,
Naanamae vannamaay poosi kondoam,
Punnagai putthagam vaasikkindroam,
Yennillae unnaiyae swaasikkindroam,
Ithu ullam pala vannangalai allum,
Sila ennangalai sollum, thullum, kannammaa,
Mounamae paarvaiyaay paesi kondoam,
Naanamae vannamaay poosi kondoam, kannammaa...

Jananam thanthaal, salanam thanthaal,
Kaadhal moliyil,
Maranam konjam, mayakkam konjam,
Oonthan tharavil,
Endrum vaalga vaalga intha naerangal,
Sugam saerga saerga varum kaalangal,
Malar soolga soolga ivar paadhaigal,
Dhinam velga velga ilam aasaigal,
Oru seiythi, adi nee enbathenn paathi,
Ini naan enbathum meethi, thaethi sollammaa,
Mounam paarvaiyaay...
Mounamae paarvaiyaay paesi kondoam,
Naanamae vannamaay poosi kondoam,

Ilakkanam udaitthathum kavithai varum,
Iravinai thudaitthathum kanavu varum,
Swarangalai thiranthathum isai malarum,
Oonarvilae karainthathum kalai valarum,
Moli thoandraatha kaalatthil nulainthaal aena?
Vili jaadaigal paesiyae nadanthaal aena?
Endrum vaalga vaalga intha naerangal,
Sugam saerga saerga varum kaalangal,
Malar soolga soolga ivar paadhaigal,
Dhinam velga velga ilam aasaigal,
Oru vellinatthai vallinamum kai saera,
Unn kaampiyatthai tholi, oonthan kannaalae paesu,
Mounamae paarvaiyaay paesi kondoam,
Naanamae vannamaay poosi kondoam,
Punnagai putthagam vaasikkindroam,
Yennillae unnaiyae swaasikkindroam,
Ithu ullam

pala vannangalai allum,
Sila ennangalai sollum
thullum
kannammaa

வித்யாசாகர் பாடல்கள் - பூ வாசம் - அன்பே சிவம்

முதலில் எனக்கு பிடித்த எல்லா வித்யாசாகர் பாடல்களையும் பகிர்ந்து கொள்கிறேன். பிறகு ராஜா பாடல்களை பற்றி பகிர்ந்து கொள்கிறேன். இது கொஞ்ச நாளில் முடிந்து விடும். அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எனக்கு சங்கீதம் சுத்தமாக தெரியாது. அதனால் ஒரு பாமரனுடைய பார்வையில் என் ரசனையை எழுதுகிறேன்.
1 . பூ வாசம் - அன்பே சிவம்
இசை - வித்யாசாகர்
பாடியவர்கள்  - விஜய் பிரகாஷ் , சாதனா சர்கம்
 அன்பே சிவம் எனக்கு மிக மிக பிடித்த திரைப்படம். இது வரை அந்த படத்தை 20 தடவையாவது பார்த்திருப்பேன். எனக்குள் கொஞ்சம் சிகப்பு சிந்தனைகள் தோன்ற அந்த படம் முக்கிய காரணம். அன்பை அனைவரின் மனதுக்குள் ஆழமாக விதைத்த அந்த படத்தில் இசையும் அருமையாக இருக்கும். அதில் காதலும் அழகாக இருக்கும். வித்யாசாகர் இசை அமைத்த படங்களிலேயே எனக்கு ரொம்ப பிடித்த படம் இது. கமலை நான் ரசிக்க ஆரம்பித்த படங்களில் ஒன்று.
அதில் இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். கமலுக்கும், கிரணுக்கும் காதல் மலர்வதை விவரிக்கும் பாடல். ஒரு ஓவியனின் காதலை அழாகாக வரிகளில் விவரித்து இருப்பார்.
உயிரல்லதெல்லாம்  உயிர்  கொள்ளும்  என்றால் ,
உயிருள்ள  நானோ  என்னாகுவேன் ?

பாடலை ரசிக்க சொடுக்கவும். http://www.mediafire.com/file/edbnahtzzb1/Poo%20Vaasam%20[Tamilmp3corner].mp3
பாடல்  வரிகள் :
பூ  வாசம்  புறப்படும்  பெண்ணே ,
நான்  பூ  வரைந்தால் ,
தீ  வந்து  விரல்  சுடும்  கண்ணே ,
நான்  தீ  வரைந்தால் ,

உயிரல்லதெல்லாம்  உயிர்  கொள்ளும்  என்றால் ,
உயிருள்ள  நானோ  என்னாகுவேன் ?
உயிர்  வாங்கிடும்  ஓவியம்  நீயடி ...

ம்ம் , புள்ளி  சேர்ந்து ,  புள்ளி  சேர்ந்து  ஓவியம் ,
உள்ளம்  சேர்ந்து , உள்ளம்  சேர்ந்து  காவியம் ,
கோடு  கோடு  ஓவியத்தின்  பாகமே ,
ஊடல்  போட  காதல்  என்று  ஆகுமே ,
ஒரு  வானம்  வரைய  நீல   வண்ணம் ,
நம்  காதல்  வரைய  என்ன  வண்ணம் ?
என் வெட்கத்தை   விரல்   தொட்டு ,
விரலேண்டும்  போல்  கொண்டு ,
நம்  காதல்  வரைவோமே , வா ,

Sunday, November 14, 2010

Kavithaikal

                              பால்
என்றுமே குடிக்காத
பிள்ளையார் முன் குடத்தில்
ஏழை குழந்தைகளின்
ஏக்கத்தில் .

                  கோடீஸ்வரன்  
கோடீஸ்வரன் ஆவது  எப்படி?
புத்தகத்தை கூவிக்கூவி விற்றான்
தெருக்கோடியிலே . 

Sunday, November 07, 2010

ஒரு வார்த்தை பேசாமல்

ஒரு பெண் காதலை சொன்னால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா ?. அதுவும் சந்தோசமாக பாடினால் ? தனக்குள் காதலால் ஏற்பட்ட அவஸ்தைகளை வர்ணித்தால் ? அதுவும் ஸ்ரேயா கோஷல் போன்ற மனதை மயக்கும் குரல் என்றால்? கண்டிப்பாக கேட்கும் போதே மகிழ்ச்சியை கொடுக்கும் பாடல்.
பாடல் : ஒரு வார்த்தை பேசாமல்
படம் : பொய் சொல்ல போறோம்
பாடியவர் : ஸ்ரேயா கோஷல்
இசை : MG ஸ்ரீகுமார்
படத்தில் ஒரு சிறிய பாடலாக வரும். முழு பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
"புயல்  காற்று  வீசாமல்  பூகம்பம்  இல்லாமல்
  என்  நெஞ்சம்  உன்னிடம்  சாயுதடா. நான்  நில்  நில்  நில்  என்றாலும்  என்  மனம்  கேட்கவில்லை" என்று ஆண் மட்டுமே பாட கேட்டிருப்போம். ஆனால் பெண்ணின் குரலில் கேட்க தவறாதீர்கள் .

பாடல் வரிகள் :
ஒரு  வார்த்தை  பேசாமல்  ஒரு  பார்வை  பார்க்காமல்  உன்  மௌனம்  ஏதோ  செய்யுதடா 
புயல்  காற்று  வீசாமல்  பூகம்பம்  இல்லாமால்  என்  நெஞ்சம்  உன்னிடம்  சாயுதடா
 நான்  நில்  நில்  நில்  என்றாலும்  என்  மனம்  கேட்கவில்லை
 தினம்  சொல்  சொல்  சொல்  என்றாலும்  என்  உதடுகள்  பேசவில்லை
 ஆனால்  கூட  ஐயோ  இந்த  அவஸ்தைகள்  பிடிக்குதடா
 ஐயோ  ஐயோ  ஐயோ  எனக்கு  காதல்  வந்திருச்சி
 பையா பையா  பையா  எனக்கு  பயித்தியம்   புடிச்சிருச்சி  
===
ஓ ஓ  ஓ  எந்தன்  இரவே  நீயும்  அவனிடம்  சென்று  தூக்கம்  இல்லை  நெடுநாள் .. என்று  சொல்வாயோ  
ஓ ஓ  ஓ  எந்தன்  இரவே  நீயும்  அவனிடம்  சென்று  தூக்கம்  இல்லை  நெடுநாள் .. என்று  சொல்வாயோ  
 இமைகள்  ரெண்டும்  மூடும்  போதும்  உன்னை  யோசிக்க
 என்  இதயம்  என்னும்  புத்தகம்  தருவேன்  வாடா வாசிக்க
 சொல்லாமல்  போனாலும்  என்  காதல்  தெரியாதா 
கண்கள்  பேசும்  பாஷைகள்  உனக்கு  கண்ணா  புரியாத
  === ஓ ஓ  ஓ   எந்தன்  பகலே  நீயும்  அவனிடம்  சென்று  வெளிச்சம்  இல்லை  வெகு  நாள்  என்று  சொல்வாயோ
 ஐயோ  ஐயோ  ஐயோ  எனக்கு  காதல்  வந்திருச்சி
 பையா பையா  பையா  எனக்கு  பயித்தியம்   புடிச்சிருச்சி  
 ஹே  ஓ ஓ  ஓ  எந்தன்  பகலே  நீயும்  அவனிடம்  சென்று  வெளிச்சம்  இல்லை  வெகு  நாள்  என்று   சொல்வாயோ  
காற்றை  கேட்டு பூக்கள்  எல்லாம்  வாசம்  தருகிறத
 கடிதம்  போட்டு  கடலை  தேடி  nadhigaL  வருகிறதா
சொல்லாமல்  போனாலும்  என்  காதல்  தெரியாதா 
கண்கள்  பேசும்  பாஷைகள்  உனக்கு  கண்ணா  புரியாத
  
 ஐயோ  ஐயோ  ஐயோ  எனக்கு  காதல்  வந்திருச்சி
 பையா பையா  பையா  எனக்கு  பயித்தியம்   புடிச்சிருச்சி  

Friday, November 05, 2010

நான் போகிறேன் மேலே மேலே

ஜேம்ஸ் வசந்தனின் கண்கள் இரண்டால் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். பிறகு பசங்க படத்தில் ஸ்ரேயா கோஷலின் குரலில் ஒரு வெட்கம் வருதே மனதை வருடியது . அதனாலேயே நாணயம் படத்தை ஒரு மேலடிக்காக எதிர் பார்த்தேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை.  ரொம்ப நாள் கழித்து எஸ். பி. பி , சித்ரா கூட்டணியில் வந்த அருமையான பாடல் .
பாடல் : நான்  போகிறேன்  மேலே மேலே
படம் : நாணயம்
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள் : எஸ். பி. பி , சித்ரா
நான் தினமும் கேட்கும் பாடல்களில் 80  சதவீதம் எஸ். பி. பி சார் பாடியதாக தான் இருக்கும். அதிலும் இளையராஜாவின் ஹிட் பாடல்களை எடுத்தால் அதில் எஸ். பி. பி அல்லது ஜானகியின் குரல் பெரும்பாலும் இருக்கும். ஜெயா டிவியின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியை நான் ஒரு வாரமும் தவற விட்டதில்லை .அந்த அளவு நான் எஸ். பி. பி ரசிகன் .அவரின் குறும்பும், அதிகமாய் அவர் கொடுக்கும் ஹம்மிங்கும் அட்டகாசமாய் இருக்கும். இதிலும் எஸ். பி. பி யும் ,சித்ராவும் பாடலின் இறுதியில் கொடுக்கும் ஹம்மிங் எனது நீண்ட நாள் ரிங் டோன்.

"வாராதோ அந்நாளும் இன்று" கு பிறகு அவரின்  ஹம்மிங்  குரல் உங்களை மயக்காமல் இருக்காது.

பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

வரிகள் :
Naan Poagiren Meley Meley
Boologamey Kaalin Keezhey
Vin Meengalin Koottam En Meley
Poovaaliyin Neeraippoley
Nee Sindhinaai Endhan Meley
Naan Pookkiren Panneer Pooppoley
Thadimaripponen Andrey Unnaippaarththa Naeram
Adaiyaalam Illaa Ondrai Kanden Nenjin Oram
Ean Unnai Paarthen Endrey Ullam Kelvikketkum
Aanaalum Nenjil Andha Naerathai Naesikkum
Naannaana Nannaa Nannaana
Naanaana Nannaa Nannaananaa
Naannaana Nannaa Nannaana
Naanaana Nannaa Nannaananaa (Naan)

Kannaadi Munney Nindren Thaniyaaga Naan Pesa
Yaarenum Jannal Thaandi Paarthaal Aiyo
Un Pakkam Thaazhppaal Poattum
Ada Ennul Nee Vandhaai
Kai Neettiththottu Paarthen Kaatrai Aiyo

En Veettil Neeyum Vandhu Serum Kaalam Ekkaalam
Poomaalai Seidhen Vaadudhey
Ennaththai Thedum Porvai Yaavum Saelaiyaagaadho
Vaaraadho Annaalum Indrey Haa..

Naa Naana Nannannaana Naa Naanannaa
Naa Naana Nannannaana Naa Naanannaa

Naa Naana Nannannaana Naa Naanannaa
Naa Naana Nannannaana Naa Naanannaa

En Thookkam Vendum Endraai
Tharamaatten Endreney
Kanavennum Kallachaavi Kondey Vandhaai
Vaarthaigal Thediththedi Naan Paesippaartheney
Ullathil Paesum Viththai Nee Thaan Thandhaai

Andraadam Poagum Paadhai Yaavum Indru Maatrangal
Kaanaamal Poanen Paadhiyil
Nee Vandhu Ennai Meettuchelvaai Endren
Ea Ea Kaalnoga Kaalnoga Nindren..

வித்யாசாகரின் பாடல் - நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற

ஏனோ எனக்கு வித்யாசாகரின் பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். கர்ணாவில் மலரே மௌனமா முதல் குருவியின் தேன் தேன் வரை.  அதிலே எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு நூறாண்டுக்கு ஒரு முறை .
பாடல் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற
படம் : தாயின் மணிக்கொடி
பாடியவர் : கோபால் ஷர்மா
கேட்க ஆரம்பித்ததில் இருந்தே யார் இந்த குரல் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தது. நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டு பார்த்தேன். யாருக்கும் தெரியவில்லை. அப்புறம் கூகுளாண்டவரின் துணையோடு கோபால் ஷர்மா என்று கண்டு பிடித்தேன். ஒரு அருமையான காதல் டூயட் கேட்க நினைத்தால் முதலில் இந்த பாட்டை கேட்டுபாருங்கள். அருமையான வரிகள் உள்ள பாடல். வைரமுத்து என்றுதான் நினைக்கிறேன்.
'ஒரு  விரல்  என்னை  தொடுகையில்  உயிர்  நிறைகிறேன்   அழகா'
'அச்சப்பட  வேண்டாம்  பெண்மையே  எந்தன்  ஆண்மையில்  உண்டு  மென்மையே '
போன்ற வரிகளில் காதலோடு நல்ல தமிழையும் ரசிக்கலாம் .
மென்மையான பின்னணி இசையில் இதயத்தை வருடும் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்
 வரிகள்
M: நூறாண்டுக்கு  ஒரு  முறை  பூக்கின்ற  பூவல்லவா
இந்த  பூவுக்கு  சேவகம்   செய்பவன்  நானல்லவா
இதழோடு  இதழ்  சேர்த்து
உயிரோடு  உயிர்  கோர்த்து  வாழவா ..

(F: repeat first lines)

F: கண்ணாலனே  கண்ணாலனே  உன்  கண்ணிலே  என்னை  கண்டேன்
M: கண்மூடினால்  கண்மூடினால்  அந்நேரமும்  உன்னை  கண்டேன்
F: ஒரு  விரல்  என்னை  தொடுகையில்  உயிர்  நிறைகிறேன்  அழகா
M: மறு  விரல்  வந்து  தொடுகையில்  விட்டு  விலகுதல்  அழகா
F: உயிர்  கொண்டு  வாழ்கின்ற  நாள்  வரை  இந்த  உறவுகள்  வேண்டும்  மன்னவா ..

(நூறாண்டுக்கு)

M: இதே  சுகம்  இதே  சுகம்  எந்நாளுமே  கண்டால்  என்ன
F: இந்நேரமே இந்நேரமே  என்  ஜீவனும்  போனால்  என்ன
M: ம்ம் . . முத்தத்திலே  பல  வகை  உண்டு  இன்று  சொல்லட்டுமா  கணக்கு
F: இப்படியே  என்னை  கட்டிக்கொள்ளு  மெல்ல  விடியட்டும்  கிழக்கு
M: அச்சப்பட  வேண்டாம்  பெண்மையே  எந்தன்  ஆண்மையில்  உண்டு  மென்மையே

எனக்கு பிடித்த பாடல்

எனக்கு பிடித்த பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். chemical  கம்பனியில் வேலை பார்க்கும் எனக்கு வேலை முடிந்து வரும் களைப்பு தெரியாமல் இருக்க பாடல்கள் கேட்பேன். எத்தனையோ நாள் எனது தலை வலி இசையால் நிவாரணம் அடைந்து இருக்கிறது . இளையராஜா , வித்யாசாகர் போன்றவர்களின் மெலடி பாடல்களை கேட்கும்போது , மனதுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து இருக்கிறேன். அந்த அனுபவங்களை உங்களுடன் பரிமாறிகொள்கிறேன்.
முதலில் எனக்கு பிடித்த பாடலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

1 . எனக்கு பிடித்த பாடல்
   படம் : ஜுலி கணபதி
  இசை : இளையராஜா
 பாடியவர் : ஸ்ரேயா கோஷல்

    நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த காலத்தில், எதேச்சையாக ராஜ் டிவியில் இந்த படம் பார்த்தேன் அப்போதுதான் முதன் முதலாக இந்த பாடலை கேட்டேன். இன்று வரை கேட்டு கொண்டே இருக்கிறேன்.
ஸ்ரேயா கோஷலின் குரலில் ஏதோ இருப்பதாக என் நண்பன் முன்பே வா பாட்டு கேட்டபோது சொன்னான். அவனுக்கு இந்த பாட்டை சிபாரிசு செய்ததில் இருந்து அவன் என்னை விட பெரிய விசிறி ஆகி விட்டான் ஸ்ரேயா கோஷலுக்கு. இளையராஜா என்றும் நான் நேசிக்கும் மனிதர்களில் ஒருவர். எனக்கு இசையைப்பற்றி ஒன்றும் தெரியாது. எந்த பாடல் எந்த ராகம் என்று கூட தெரியாது. ஆனால் பாமரனும் சங்கீதத்தின் சுவையை அனுபவிக்க வைத்ததில் அவருக்கு இணை யாரவது உண்ட என்று தெரியவில்லை. இசை ஒரு மருந்து என்று பாட புத்தகத்தில் படித்ததை நிஜத்தில் உணர வைத்தவர். இந்த பாடலும் அந்த ரகம் தான். மென்மையான குரலும் , மென்மையான இசையும் சேர்ந்த மெல்லிசையினை அனுபவியுங்கள்.
தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
http://v2knetwork.net/mp3/j/Julie_Ganapathy_www.shakthi.fm/shakthi.FM%20%20-%20%20Enakku%20Pidiththa%20Paadal.MP3
வரிகள்

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்