Wednesday, November 02, 2011

சிறு கவிதைகள்

வெயில்
மதிய வேலையில் நடக்கும்பொழுது
வெயில் என்று மூடிக்கொள்கிறாய் முகத்தை
உன் முகம் காணாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரிக்கிறது சூரியன்.

துரதிஷ்டம் 

 உன்  முகம் காணாத நாட்களை
மறுநாள் தேதி கிழிக்கும்போழுது பார்க்கிறேன்
ராசிபலனில் துரதிஷ்டம்

வாசனை

நீ தலை குளித்தவுடன்
எழும் வாசனையில்
பூக்கள் தலைக்குனிவுடன்
ஒப்புக்கொள்கிறது தன தோல்வியை .

நீலம்
வான நீல வண்ணம்
எனக்கும் பிடிக்கும் என்றாய்
இப்போதெல்லாம் நான் வானத்தை
பார்க்கிறேன் பொறாமையாய். 




செருப்பு
காலம் காலமாக மிதிபட்டே வந்தபோதும்
கல்லும் முள்ளும் குத்தி காயப்பட்டபோதும்
வாசலிலேயே நிறுத்தி அவமானப்படுத்தப்பட்ட போதும் 
போராட திராணியற்ற  செருப்பும்  
தாழ்த்தப்பட்ட சாதியோ !
பெண் சிசு 
வகை வகையாய் வரிசையுடன்
வளைகாப்பு கொண்டாடி
குடும்பம் கூடி சீட்டெடுத்து
செல்லப்பெயர் கண்டெடுத்து
குங்கும பூவும் இன்ன பிறவும்
குடம் குடமாய் கொண்டு வந்து
மாநகரில் மிகச்சிறந்த
மருத்துவமனையில் வந்துசேர்த்து
தாய்சேய் நலப்பிரிவில்
ஸ்கேன் பண்ணி பார்த்த பிறகு
தாய் மட்டும் நலமா
வந்து சேர்ந்தா வீட்டுக்கு .

3 comments:

  1. நல்லா எழுதிருக்கீங்க, தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் இன்னும் சிறப்பாக எழுதமுடியும்.

    ReplyDelete
  2. முதல் கவிதை ரொம்ப நல்லா இருக்கு. மற்றவைகளும் ரசிக்கும்படியே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete