Sunday, December 26, 2010

எனக்கு பிடித்த பாடல்கள் - 2010

2010 இல் வெளியான பாடல்களில் எனக்கு பிடித்தவை :
1 . உன் பேரை சொல்லும்போதே - அங்காடி தெரு
   இந்த பாடல் வெளியான போதில் இருந்தே கேட்டு கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருடமாக என் மொபைலில்  இருந்த பாடல். ஸ்ரேயா கோஷல் கொஞ்சும் குரலில் காதல் வழியும் பாடல்.
 " உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்"
" நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்"
  முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்" அருமையான வரிகள்.

2 . என் காதல் சொல்ல - பையா
   பொதுவாக யுவன் பாடும் பாடல்கள் நான் விரும்பி கேட்க மாட்டேன். இந்த பாடும் வெளிவந்து நீண்ட நாட்களாக நான் கேட்காமலே இருந்தேன். ஆனால் படம் வந்த பிறகு அது படமாக்கப்பட்ட விதத்தை பார்த்த பிறகும், வரிகளை கேட்ட பிறகும் தொடர்ந்து கேட்க ஆரம்பித்து விட்டேன்.
3 . மன்னிப்பாயா - விண்ணைத்தாண்டி வருவாயா 
  பொதுவாக  ரஹ்மான் பாட்டு லடே பிக் அப் ஆகும் என்று கொஞ்ச நாள் கேட்காமலே இருந்தேன். ஆனால் கேட்க ஆரம்பித்ததில் இருந்து தினமும் கேட்டு கொண்டு இருக்கிறேன். தாமரை எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆசிரியை. அதுவும் ஈழப்போர் நடந்த சமயத்தில் அவர் பேசியவைகளை கேட்க அருமையாக இருக்கும். காங்கிரசையும் சோனியாவையும் அவர் கேட்கும் கேள்விகள், ஈழத்து வலிகளை அவர் விவரிக்கும் விதம் என நான் அவர் ரசிகன். அவருடைய  பாடலில் நல்ல தமிழ் இருக்கும். இந்த பாடலிலும் வரிகள் அருமையாக இருக்கும்.
" ஒரு நாள் சிரித்தேன் ஒரு நாள் வெறுத்தேன்
  உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேன் மன்னிப்பாயா"
 ஸ்ரேயா கோஷலின் தேன் குரலில் மனதை மயக்கிய பாடல்.
4  . கிளிமஞ்சாரோ - எந்திரன்
     சங்கீத மகா யுத்தம் பார்க்க தொடங்கிய பிறகு சின்மயி பிடித்துப்போனதால் எந்திரன் படப்பாடல்களில் முதலில் கேட்க ஆரம்பித்த பாடல். சின்மயி குரலில் அவர் பாட்டுக்கு பாட்டு வாய்ஸ் மாடுலேசன் செய்வதாக தோன்றுகிறது.
5 . கை வீசி - நந்தலாலா
  படத்தில் வரும் என்று எதிர்பார்த்த  பாடல், ஆனால் வரவில்லை. இதுவும் அங்காடி தெரு போல பாடல் எப்போதோ வெளியானது. அப்பொழுதில்  இருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். விஜய் யேசுதாஸ், ஸ்வேதா (சுஜாதா மகள் ) பாடிய பாடல். அந்த கால ராஜா டூயட் திரும்ப கேட்ட மாதிரியான உணர்வை கொடுத்தது.
நிஜமாகவே ஒரு மனதை மயக்கும் மெலடி.
6 . ஜிங்கு சிக்கு - மைனா
  நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மண் வாசம் வீசும் கிராமிய பாடலை கேட்ட திருப்தி கொடுத்த பாடல்.
7 . நான் போகிறேன் - நாணயம்
   SPB , சித்ரா கூட்டணியில் வந்த அருமையான பாடல். இந்த பாடல் பற்றி  பாடல் வரிகளுடன் ஒரு போஸ்ட் எழுதியுள்ளேன்.
8 . இது வரை இல்லாத - கோவா
      கோவா என்ற மொக்கை படத்தில் உருப்படியான ஒன்று இந்த பாடல்.ஆண்ட்ரியா   போலவே அவரது குரலும் செசியாக இருக்கும். airtel சூப்பர் சிங்கர் போட்டியில் வென்ற அஜீசும் நன்றாக பாடி இருப்பார் .
9  . பூக்கள் பூக்கும் - மதராசபட்டினம் 
     GV  பிரகாஷின் இந்த வருட மெலடி இது. பாடல் வரிகளும் அருமையாக இருக்கும். இந்துஸ்தானி, கர்நாடிக்,  வெஸ்டர்ன் எல்லாம் இந்த பாட்டில் வரும் என்றார்கள். எனது அதை பற்றி எல்லாம் தெரியாது. ஆனால் கேட்டுக்கொண்டே இருக்க வைத்த பாடல் இது.
" நேற்று வரை நேரம் போக வில்லையே
  உனதருகே நேரம் போத வில்லையே:"
"இரவும் விடிவதில்லையே அது விடிந்தால் பகலும் முடிவதில்லையே "
"இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்"
ஹரிணி, ரூப் குமாரின் குரலின் அருமையான வரிகள்.
 

No comments:

Post a Comment