Friday, November 05, 2010

எனக்கு பிடித்த பாடல்

எனக்கு பிடித்த பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். chemical  கம்பனியில் வேலை பார்க்கும் எனக்கு வேலை முடிந்து வரும் களைப்பு தெரியாமல் இருக்க பாடல்கள் கேட்பேன். எத்தனையோ நாள் எனது தலை வலி இசையால் நிவாரணம் அடைந்து இருக்கிறது . இளையராஜா , வித்யாசாகர் போன்றவர்களின் மெலடி பாடல்களை கேட்கும்போது , மனதுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து இருக்கிறேன். அந்த அனுபவங்களை உங்களுடன் பரிமாறிகொள்கிறேன்.
முதலில் எனக்கு பிடித்த பாடலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

1 . எனக்கு பிடித்த பாடல்
   படம் : ஜுலி கணபதி
  இசை : இளையராஜா
 பாடியவர் : ஸ்ரேயா கோஷல்

    நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த காலத்தில், எதேச்சையாக ராஜ் டிவியில் இந்த படம் பார்த்தேன் அப்போதுதான் முதன் முதலாக இந்த பாடலை கேட்டேன். இன்று வரை கேட்டு கொண்டே இருக்கிறேன்.
ஸ்ரேயா கோஷலின் குரலில் ஏதோ இருப்பதாக என் நண்பன் முன்பே வா பாட்டு கேட்டபோது சொன்னான். அவனுக்கு இந்த பாட்டை சிபாரிசு செய்ததில் இருந்து அவன் என்னை விட பெரிய விசிறி ஆகி விட்டான் ஸ்ரேயா கோஷலுக்கு. இளையராஜா என்றும் நான் நேசிக்கும் மனிதர்களில் ஒருவர். எனக்கு இசையைப்பற்றி ஒன்றும் தெரியாது. எந்த பாடல் எந்த ராகம் என்று கூட தெரியாது. ஆனால் பாமரனும் சங்கீதத்தின் சுவையை அனுபவிக்க வைத்ததில் அவருக்கு இணை யாரவது உண்ட என்று தெரியவில்லை. இசை ஒரு மருந்து என்று பாட புத்தகத்தில் படித்ததை நிஜத்தில் உணர வைத்தவர். இந்த பாடலும் அந்த ரகம் தான். மென்மையான குரலும் , மென்மையான இசையும் சேர்ந்த மெல்லிசையினை அனுபவியுங்கள்.
தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
http://v2knetwork.net/mp3/j/Julie_Ganapathy_www.shakthi.fm/shakthi.FM%20%20-%20%20Enakku%20Pidiththa%20Paadal.MP3
வரிகள்

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

No comments:

Post a Comment