Monday, October 31, 2011

அணு அணுவாய் - சவால் சிறுகதை போட்டி 2011

ரெயின் கோட் அணிந்த அந்த பெரிய உருவம் ஹோட்டலின் அதிகாரி அறையை நோக்கி நகர்ந்தது. 

"யாருய்யா , மொதல்ல பார்த்தது ?"

ஷர்ட்டும் லுங்கியும் அணிந்திருந்த அந்த அதிகாரி பவ்யமாக கை கட்டிக்கொண்டு பதில் அளித்தார் ."நைட் ஷிப்ட் முடிஞ்சு போற பையன் ரூம் செக் பண்ண காலைல போனப்ப இந்த ரூம் கதவு தொறந்து இருந்திருக்கு. உள்ள எட்டி பாத்தப்ப இவர் எந்த சலனமும் இல்லாம இருந்தத பாத்துட்டு என்கிட்ட சொன்னான் சார். அதான்  உங்களுக்கு போன் செஞ்சேன் சார்."
"என்ன அட்ரஸ் கொடுத்து இருக்கார்?".
" Dr. Rahul Gupta 
   Scientist - F,
   H-2, Homi Babha Colony,
   IGCAR, Kalpakkam"

எஸ்.பி கோகுல் IPS  என்று பொறிக்கப்பட்ட  கதவை தள்ளிக்கொண்டு வேகமாக நுழைந்தார் அந்த விசாரணை அதிகாரி.

காவல் உடையின் கம்பீரத்துடன் அமர்ந்திருந்த எஸ்.பி கனைத்துக்கொண்டே கேட்டார். "என்ன எசக்கி, எதாவது தகவல் கெடச்சுதா?. கேஸ் ரொம்ப முக்கியமானது. இறந்து போனது இந்திய அணுசக்தி கழக விஞ்ஞானி . மேல் இடத்துல இருந்து போன் மேல போன் வந்துட்டு இருக்கு. ஸ்பெசலா சி.பி ஐ ல இருந்து விவேக்னு ஆபீசர இந்த கேஸ் விசாரணைக்காக அனுப்பி இருக்காங்க."

"இறந்து போனவர் முகவரிக்கு போய் பாக்க சொல்லி  கல்பாக்கம் போலீஸ் கிட்ட சொல்லியாச்சு சார். ஹோட்டல்ல அந்த அறையை முழுசா செக் பண்ணியாச்சு சார். அவர் சூட் கேஸ் தவிர எந்த தடயமும் கெடைக்கல. அது அணுசக்தி துறை சம்பந்தமா கொஞ்ச புத்தகம், அவர் துணிகள், அப்பறம் ரிடர்ன் டிக்கெட் இதுதான் இருந்துச்சு சார். அவர் பாடிய போஸ்ட் மார்ட்டம் பண்ண அனுப்ப போறோம் சார். அது வந்தா தான் அவர் சாவு இயற்கையானதா இல்ல கொலையானு தெரியும் சார்."

"OK.Proceed" சொல்லிவிட்டு அலறிக்கொண்டு இருந்த தொலைபேசியை எடுத்து தன் காதுக்கு கொடுத்தார்.

வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து  தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த காரில் விவேக்கும், விஷ்ணுவும் வந்துகொண்டிருந்தார்கள்.
" விஷ்ணு, நீ கேஸ தனியா டீல் பண்ணு. சந்தேகப்படற மாதிரி எது இருந்தாலும் எனக்கு சொல்லு. நம்ம ரெண்டு பெரும் சந்திக்கிறத முடிஞ்ச அளவுக்கு தவிர்த்துடு. கேஸ சீக்கிரம் முடிக்கணும் ."
" ஓகே பாஸ். நான் மொதல்ல போயி அந்த ஹோட்டல்ல எதாவது துப்பு கெடைக்குதான்னு பாக்கறேன். "

விஷ்ணு அந்த ஹோட்டலுக்குள் நுழைந்த போது அதன் தினசரி பரபரப்பில் தன்னை இணைத்துக்கொண்டு இருந்தது.

" விஷ்ணு ப்ரம் சி.பி.ஐ. அந்த அறையை நன் செக் பண்ணலாமா ?"
" ஷூர் சார்" . அறை சாவியை எடுத்துக்கொண்டு விஷ்ணுவின் வேக நடையை பின் தொடர்ந்தார் அந்த ஹோட்டல் அலுவலர்.
விஷ்ணு அறை முழுவதையும் தேடிக்கொண்டிருந்த போது, கட்டிலின் கீழ் அது கிடந்தது. அதை எடுத்து பத்திரப்படுதிக்கொண்டார்.


"விஷ்ணு , போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் விஞ்ஞானி உடம்புல எதோ மர்ம விஷம் இருக்குனு சொல்லி இருக்கு. அது என்னனு பாரன்சிக்ல கொடுத்து கேட்டப்ப, அது அணு கதிர் வீச்சு வகைய சேர்ந்த ஒரு வகை நச்சுனு சொல்றாங்க.உனக்கு எதாவது தகவல் கெடச்சு இருக்கா? "

" பாஸ். நேத்து அந்த அறைக்கு  நான் போனப்ப அங்க சயின்டிஸ்ட் விசிடிங் கார்ட் கெடந்துது , அது பின்னால ஒரு ரகசிய குறியீடு இருந்துது. "

" அது என்ன அது. நீ எடுத்தது யாருக்காவது தெரியுமா ?"

" அந்த ஹோட்டல் மேனேஜர்  கூடவே வந்தான். அவன் எப்படியும் எஸ்.பி கிட்ட சொல்லிடுவான்னு நான் எஸ்.பி க்கும் அந்த குறியீட அனுப்பி வச்சுட்டேன். "
"அவசரப்பட்டுடியே விஷ்ணு. அந்த சயின்டிஸ்ட் மொபைல் நம்பர ட்ரேஸ் பண்ணணப்ப அதுல எஸ்.பி கோகுலுக்கு 4 கால் போயிருக்கு. அதனால அவரையும் சந்தேக லிஸ்ட்ல வச்சிருக்கேன்."

"நம்ம சி.பி.ஐ கத்துக்கொடுத்த முதல் பாடமே எல்லாரையும் சந்தேகப்படு தான் சார் .  உங்க மெய்லுக்கு அவருக்கு அனுப்பின குறியீட அனுப்பி இருக்கேன். அதுல இன்னொரு தகவலும் இருக்கு. அத கொஞ்ச புத்திசாலித்தனமா அனுப்பி இருக்கேன். பாத்துக்கங்க சார். "

விவேக் மெயிலில் இருந்து எடுத்த பிரிண்டில் நமிதாவின் கலகல பேட்டிக்கு நடுவில் இருந்து இரண்டு செய்தி துண்டுகளை ஸ்கேலால் வெட்டி எடுத்தார். விஷ்ணுவின் விளையாட்டுத்தனத்தை நினைத்து சிரித்துக்கொண்டே அந்த துண்டுகளை மேசை மேல் வைத்தார்.


"Sir.எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு."
"Mr .கோகுல் S W H2 6F.இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு."
  
படித்துக்கொண்டு இருக்கும்போதே விஷ்ணுவின் அழைப்பு மொபைலில் வந்தது.
" சார். கேஸ் கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரி. எனக்கு கெடச்ச குறியேடு R C H2 6F . இத வச்சி ராஜீவ் காலனில வீட்டு நம்பர் 2 , சிக்ஸ்த் ப்ளோர் போனப்ப, அந்த சின்ன  வீட்ல யாரும் இல்ல. அங்க உள்ள நுழைந்து செக் பண்ணி பார்த்தப்ப ஒரு லெட்டர் கெடைச்சுது சார். அத எடுத்துட்டு எஸ்.பி ஆபிஸ் வரேன் நீங்களும் வந்துடுங்க சார். "
அழகான கை எழுத்தில் எழுதப்பட்ட அந்த கடிதத்தை விஷ்ணு உரக்க படிக்க விவேக், எஸ்.பி உட்பட அனைவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர்.


"இந்திய அரசாங்கத்துக்கு ,
உங்கள் நாட்டின் கடைக்கோடியில் உள்ள சபிக்கப்பட்ட தமிழ் திருநாட்டின் குடிமகன் எழுதுவது.உலக நாடுகள் எல்லாம் ஒதுக்கி தள்ளிய , கேரளா, மேற்கு வங்க அரசுகள் வேண்டாம் என்று தள்ளிய அணு உலைகளை எங்கள் தமிழ் மண்ணில் நிறுவுவதால் நாங்கள் சபிகப்பட்டவர்கள்தான்.அணு சக்தியின்  கோர முகத்தை ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகியின் மூலம் காட்டியதோடில்லாமல் இப்பொழுது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்து காட்டியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அணுவின் ஆட்டத்தை அனுபவத்தின் மூலம் கண்டு அணு உலைகளை மூடிக்கொண்டிருக்கிறது.இது அனைத்தும் தெரிந்தும் நீங்கள் யாரையோ திருப்திபடுத்த சொந்த நாடு மக்கள் மீதே அணு உலைகளை திணித்து வருகிறீர்கள். எங்கள் அமைதியான 20 ஆண்டு கால போராட்டம்  உங்கள் மனதில் எந்த வித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. அத்தகைய அணு உலைகளின் தீமைகளை மறைத்துவிட்டு , நன்மைகள் என்ற பெயரில் பசப்புரைகளை பரப்ப உங்களால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ராகுல் குப்தாவுக்கு அணு கதிரின் தீமைகளை உணர்த்தும்  வகையில் கதிர் வீச்சு நிறைந்த வேதிப்பொருளை அவர் உடம்பில் செலுத்தி உள்ளேன். இது போன்ற அணு கதிர் எம்மக்களின் மீதும் வீசும் காலம் வெகு தொலைவில் இல்லை. இப்போதாவது அணு உலைகளின் விஷத்தன்மையை அரசு உணர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.இந்த கொலையை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்பதற்காகத்தான் அந்த இடத்தில என் முகவரியை ரகசிய குறியீடாக எழுதி வைத்து சென்றேன்.  ஒரு உயிரை பறிக்கும் காரியத்தை செய்து விட்டு இனி என்னால் நிம்மதியாக வாழ இயலாது. எனவே நானும் என் உயிரை நானும்  மாய்த்துக்கொள்கிறேன். என் கண்ணை எடுத்து தானம் செய்யுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், அதில அணு கதிர் வீச்சு  இல்லாத என் தாய்த்திருநாட்டைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கையுடன்".

3 comments:

  1. அட, அணு கதிர் பற்றிய சிந்தனையில் எழுதப்பட்ட கதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நாட்டு மக்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கும் அணு உலைப் பிரச்னையை அழகாகக் கதையில் கொண்டு வந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete